Tuesday, March 23, 2010

அவள்

என்னை தட்டி பார்த்து சிரித்தாள் - பத்து மாத குழந்தையான அவள்
தன் ஆடையைக் காட்டி "அழகா இருக்கா" என்றாள் - 5 வயதான போது
தாயின் புடவையை சுற்றி கொண்டு நின்றாள் - பத்து வயதான போது
தான் பருவை காட்டி வருந்தினாள் - பதினைந்து வயதில்
"நான் அழகா இல்லையோ" என்றாள் - பதினெட்டு வயதில்
"நான் அழகா இருக்கிறேனோ" என்றாள் - காதல் வந்த பின்
என்னை பார்த்து மௌனமாய் சிரித்தால் - திருமண நாளில்
தான் வயிற்றை தினம் தினம் அளவெடுத்து காட்டினாள் - கருவுற்ற போது
தான் தலையைக் காட்டி "நரைத்து விட்டதோ" என்றால் - 60 வயதில்
போகும் போது மட்டும் ஏனோ சொல்லிக்கொள்ள வில்லை
இப்படிக்கு
அவளை பிரதிபலித்த கண்ணாடி

நண்பர்கள்

நண்பர்களே வாழ்வெனும் புத்தகத்தின் நட்பெனும் பக்கத்தை
உங்களுக்காக ஒதுக்கி வைத்தேன்
நினைக்கும் பொழுதெலாம் புரட்டி பார்க்க
அதனை போட்டி போட்டுக் கொண்டு நிரப்பி விட்டு சென்றீர்கள்
சில வார்த்தைகள் சிரிப்பை தந்தன
சில கண்ணீர் தந்தன
பொங்கி வந்த கண்ணீர் திரயை அடக்கி கொண்டேன்
கண்ணீர் பட்டு உங்கள் எழுத்துக்கள்
அழிந்து விடக் கூடாது என்பதற்காக

நட்பு

நட்பே உனது மறுபெயர் என்ன பிரிவா என்றேன்
இல்லை இல்லை மலரும் நினைவுகள் என்று கூறி பிரிந்தது

வெளிப்பாடு

என் புன்சிரிப்பை பார்த்தே மயங்கினாய்
என் தள்ளாடிய ந்டையை பார்த்தே பெருமிதம் கொண்டாய்
என் எச்சில் சோற்றை அமிர்தம் என்றாய்
நான் தூக்கம் வந்து கண்களை கசக்கினால்
என் நெற்றியில் முத்தமிட்டு என்னை உன் தோள்களில் சாய்த்துக் கொண்டாய்
சொற்கள் அற்ற செயல்களால் உன் காதலை வெளிப்படுத்தி விட்டாய்
ஒரு வயதே நிரம்பிய என்னால் சொற்களால் வெளிப்படுத்த முடியாத
காதலை உன் கன்னத்தில் இடும் எச்சில் நிறைந்த
முத்தத்தின் மூலம் புரிந்து கொள்- அம்மா